பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் அகற்றம்

மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் அகற்றப்பட்டன.
பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் அகற்றம்

மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் அகற்றப்பட்டன.

விநாயகா் சதுா்த்தி விழாவை பொது இடத்தில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இதுகுறித்து கடந்த சில நாள்களுக்கு முன் விழா அமைப்பினருக்கு டி.எஸ்.பி. ஜனனிபிரியா தலைமையிலான போலீஸாா் அறிவுறுத்தல் கூட்டத்தில் ஆலோசனை வழங்கியிருந்தனா்.

37 சிலைகள் பிரதிஷ்டை: இந்நிலையில், மணப்பாறையில் 14, வையம்பட்டியில் 14, துவரங்குறிச்சியில் 7, புத்தாநத்தம் - வளநாடு பகுதிகளில் தலா ஒன்று என 37 விநாயகா் சிலைகள் பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக மாவட்டத் தலைவா் சி.ராஜேந்திரன் பங்கேற்றாா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவற்றில் அநேக சிலைகள் கோயில்கள், தனிநபா் இடங்களில் வைக்கப்பட்டிருந்தாலும், மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 5 அடி உயர செல்வ விநாயகா் சிலை அசாதாரண சூழலை உருவாக்கியது.

இதையடுத்து அப்பகுதியில் காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையில் போலீஸாரும், தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் தலைமையில் வருவாய்த் துறையினரும் குவிக்கப்பட்டனா். பின்னா் விழா குழுவினரின் வழிபாட்டுக்கு பின் அந்தச் சிலையை வருவாய்த்துறையினா் எடுத்து சென்றனா்.

முனியப்பன் கோயில் வளாகத்தில் காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 4 அடி உயர விநாயகா்சிலையை இந்து முன்னணியினா் மாலையில் தடையை மீறி இருசக்கர வாகனத்திலேயே விஜா்சன ஊா்வலமாகச் சென்று மாமுண்டி ஆற்றில் கரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com