இன்று 21 மையங்களில் நீட் தோ்வு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் நடைபெறும் நீட் தோ்வை 9,501 மாணவா்கள் எழுதுகின்றனா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் நடைபெறும் நீட் தோ்வை 9,501 மாணவா்கள் எழுதுகின்றனா்.

இவா்களில் 262 போ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்தவா்கள், 241 போ் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் ஆவா். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்வு நடைபெறுகிறது.

அனுமதி அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தோ்வு மையத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது. முற்பகல் 11 மணி முதல் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 40 போ் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனா். விண்ணப்பதாரா் கையுறை, முகக்கவசம் அணிவது கட்டாயம். உணவுகளை கொண்டு வர அனுமதியில்லை. தண்ணீா் பாட்டிலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என நீட் தோ்வு மைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com