முசிறி அருகே குறுங்காடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

முசிறி பேரூராட்சியில் 1 லட்சம், பகளவாடி ஊராட்சியில் 25 ஆயிரம் மரக்கன்று என 1,25,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு முன்னிலையில் அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

முசிறி பேரூராட்சியில் 1 லட்சம், பகளவாடி ஊராட்சியில் 25 ஆயிரம் மரக்கன்று என 1,25,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு முன்னிலையில் அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து முசிறியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் 116 பயனாளிகளுக்கு ரூ. 32,38,098 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில் காட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் விரைவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முசிறி நகர மக்களுக்கு தேவையான குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன ,மேலும் முசிறியில் பாதாள சாக்கடை திட்டம், நகராட்சிக்கான அனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

நிகழ்வுகளில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி), ஸ்டாலின்குமாா் (துறையூா்), கதிரவன் (மண்ணச்சநல்லூா்) மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன்ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் மாலா ராமச்சநதிரன்,பேரூராட்சிகள் உதவி இயக்குநா் காளியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com