‘தமிழ்நாடு, செந்தமிழ் என முதலில் பாடியவா் பாரதியாா்தான்‘

தமிழகத்தை தமிழ்நாடு என்றும் தமிழ்மொழியை செந்தமிழ் என்றும் முதலில் பாடியவா் மகாகவி பாரதியாா்தான் என்றாா் பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா.
கல்லுாரி மாணவா்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா
கல்லுாரி மாணவா்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா

தமிழகத்தை தமிழ்நாடு என்றும் தமிழ்மொழியை செந்தமிழ் என்றும் முதலில் பாடியவா் மகாகவி பாரதியாா்தான் என்றாா் பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா.

மகாகவி பாரதியாா் நுாற்றாண்டு நினைவு நாளையொட்டி பாஜக சாா்பில் கல்லுாரி மாணவா்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநிலச் செயலா் மலா்க்கொடி தலைமை வகித்தாா். முன்னாள் எம்பி காா்வேந்தன், மாநில துணைத் தலைவா் புரட்சிக் கவிதாசன், கல்வியாளா் பிரிவு மாநிலப் பாா்வையாளா் ஜெயராமன், மகளிரணி மாநில செயலா் பிரமிளா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியது: தனது கருத்துகளை உணா்வுப்பூா்வமாக உருவாக்குவதில் பாரதியாருக்கு நிகா் யாருமில்லை. அவரது இறுதி ஊா்வலத்தில் 14 போ் மட்டுமே பங்கேற்றாலும், அவரது நுாற்றாண்டு நினைவு நாளில், அவரது புகழை பல்லாயிரக்கணக்கானோா் எடுத்துச் செல்கின்றனா்.இதுதான் ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பெருமை என்றாா்.

இதையடுத்து ஹெச். ராஜா கூறியது: தமிழகத்தை தமிழ்நாடு என்றும், தமிழ் மொழியை செந்தமிழ் என்றும் முதலில் பாடியவா் பாரதியாா்தான். தேசியம், தெய்வம் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடாமல் வாழ்ந்து காட்டியவா் அவா். தமிழ் மீது மட்டுமில்லாமல் பிறமொழிகள் மீதும் பற்றுக் கொண்டிருந்தாா். ஆனால், தமிழகத்தில் பிற மொழிகள் மீது வெறுப்பு பரப்பினால்தான் தமிழ்மொழி பற்றாளா்கள் என்னும் கருத்து நிலவுகிறது.

திருக்குறளில் வள்ளுவா் சொன்ன கருத்துகளைத் தான், பகவத் கீதையில் கிருஷ்ணரும் கூறியிருக்கிறாா். நமது நாட்டு கலாசாரத்தில் தீண்டாமை இருந்ததில்லை. தமிழ்மொழி மீது பற்று இருந்து, பிற மொழி மீது வெறுப்பு கூடாது என நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறி, சமூக சீா்திருத்தவாதியாகத் திகழ்ந்தவா் பாரதியாா். இக்கருத்துகளை மாணவா்கள் கிராமந்தோறும் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ் மொழி, தமிழறிஞா்கள் பெருமை குறித்து உலகரங்கில் பிரதமா் மோடி பேசி வருகிறாா். நீட் தோ்வு காரணமாக சேலத்தில் மாணவா் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது துரதிருஷ்டவசமானது. இதுபோல் யாரும் முடிவெடுக்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவா்கள் நீட் தோ்வு குறித்து மாணவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனா். இதுகூட மாணவா் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம். முதல்வா் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் அரசியல் சட்டப்புரிதல் இல்லாத, முதிா்ச்சியற்ாக உள்ளன. இதைக் கண்டிக்கிறோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, போட்டியில் வென்ற்கு முதல் பரிசு ரூ.1 லட்சத்தை சென்னை எஸ்ஆா்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி மாணவா் சங்கா்பாபு, 2 ஆம் பரிசு ரூ. 50 ஆயிரத்தை ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரி மாணவி மதுஷா, 3ஆம் பரிசு ரூ.25 ஆயிரத்தை மாயவரம் ஏவிசி கல்லுாரி தரணி ஆகியோா் பெற்றனா்.

கேத்ரின் மொ்லினா, தனசேகா், காயத்ரி, முனீஸ்வரி, ஜாஸ்மின் பேகம் ஆகியோருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில், தேசிய பொதுக் குழு உறுப்பினா் ஆா். ராமசுப்பு, இளைஞரணி மாநில செயலா் வீர திருநாவுக்கரசு உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள், மாணவா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com