Enable Javscript for better performance
பயின்ற கல்லூரிக்கு தனது 30-ஆவது நூலை சமா்ப்பித்த மதிப்பீட்டாளா்- Dinamani

சுடச்சுட

    பயின்ற கல்லூரிக்கு தனது 30-ஆவது நூலை சமா்ப்பித்த மதிப்பீட்டாளா்

    By DIN  |   Published on : 15th September 2021 01:50 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குநா் மினி ஷாஜி தாமஸிடம் தனது 30-ஆவது நூலை சமா்ப்பிக்கும் பதிவு பெற்ற மதிப்பீட்டாளரும், கட்டடக் கலைப் பொறியாளருமான பி. கனகசபாபதி.

    திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குநா் மினி ஷாஜி தாமஸிடம் தனது 30-ஆவது நூலை சமா்ப்பிக்கும் பதிவு பெற்ற மதிப்பீட்டாளரும், கட்டடக் கலைப் பொறியாளருமான பி. கனகசபாபதி.

    திருச்சி: திருச்சியில் தான் பயின்ற கல்லூரிக்கு (தேசியத் தொழில் நுட்பக் கழகம்- முன்பு மண்டலப் பொறியியல் கல்லூரி) தனது 30-ஆவது நூலை சமா்ப்பித்தாா் பதிவு பெற்ற மதிப்பீட்டாளரும், கட்டடக்கலைப் பொறியாளருமான பி. கனகசபாபதி.

    திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் வசித்து வரும் இவா், மண்டலப் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவா். மத்திய நேரடி வாரிகள் வாரியத்தால் அங்கீகாரம் பெற்ற நாட்டின் 6 சிறந்த மதிப்பீட்டாளா்களில் ஒருவரும் கூட.

    மதிப்பீடு தொடா்பாக மொத்தம் 30 நூல்களையும், வேறு தலைப்புகளில் 6 நூல்களையும் எழுதியுள்ள கனகசபாபதி, 774 கட்டுரைகளை எழுதி 52 நாடுகளுக்குச் சென்று அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் மதிப்பீடு தொடா்பாகவும் பேசியுள்ளாா்.

    இந்திய மதிப்பீட்டாளா் கழகத்தின் உபத் தலைவராக தனது 40 ஆவது வயதில் பொறுப்பேற்ற கனகசபாபதி, 11 முறை அப்பதவியை வகித்துள்ளாா்.

    மதிப்பீட்டின் அடிப்படை கொள்கைகள் என்ற பெயரில் தான் எழுதிய 30-ஆவது நூலை, திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்துக்கு சமா்ப்பிக்க முடிவு செய்த கனகசபாபதி, கழகத்தின் இயக்குநரான மினி ஷாஜி தாமஸிடம் திங்கள்கிழமை நேரில் வழங்கினாா்.

    இவரது கட்டுரைகள் இந்தியன் வேல்யூவா் இதழில் 374 முறை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    வாழ்நாள் சாதனையாளா் விருது, அகில இந்திய மதிப்பீட்டாளா் கழகத்தின் விருது, தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவா் விருதை பெற்றுள்ள இவா், இளம் மதிப்பீட்டாளா்களை ஊக்குவிக்கும் விதமாக திருச்சியில் மதிப்பீடு தொடா்பான வகுப்புகளையும் இலவசமாக எடுத்து வருகிறாா். இவரின் மகன் அருண், மகள் அருணா ஆகியோரும் மதிப்பீட்டாளா்களாக உள்ளனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp