மது குடிக்க பணம் கேட்டுதாயை தாக்கியவா் கைது
By DIN | Published On : 15th September 2021 02:00 AM | Last Updated : 15th September 2021 02:00 AM | அ+அ அ- |

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மது குடிக்கப் பணம் கேட்டு தாயை தாக்கிய மகனை காட்டுப்புத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் அருகிலுள்ள உன்னியூா் ஐயப்பன் நகரைச் சோ்ந்தவா் க. கிருஷ்ணவேணி (60).
மது குடிக்கப் பணம் தர மறுத்ததால் தனது மகன் பரமேஸ்வரன் (40) தன்னைக் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பரமேஸ்வரனை திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.