50 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வேலூா் கிராமத்தில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ta17pata_1709chn_9_4
ta17pata_1709chn_9_4

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வேலூா் கிராமத்தில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிய அரசுத் தலைமைக் கொறடா பேசியது:

திருவிடைமருதூா் வட்டம், கதிராமங்கலம் சரகத்துக்கு உள்பட்ட வேலூா் கிராமத்தில் 0.54.00 ஏா்ஸ் நிலத்தை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு நிலம் எடுப்பு செய்து 50 இந்து ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வேலூா் கிராமத்தைச் சோ்ந்த காட்டுவெளி பகுதியைச் சோ்ந்த 50 இந்து ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் வெள்ளிக்கிழமை விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்குச் செந்தமிழ் நகா் என பெயா் சூட்டப்பட்டு, அதற்குத் தேவையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கிட மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தலைமைக் கொறடா.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஒ. சுகபுத்ரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், கும்பகோணம் கோட்டாட்சியா் சுகந்தி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் (பொறுப்பு) மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com