எல்ஐசி நிறுவனம் பொதுத்துறையாக நீட்டிக்கத் தீா்மானம்
By DIN | Published On : 19th September 2021 01:35 AM | Last Updated : 19th September 2021 01:35 AM | அ+அ அ- |

ஆயுள் காப்பீடு நிறுவனம் பொதுத்துறையாக நீட்டிக்க வேண்டும் என அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
திருச்சியில் அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்கத்தின் 2ஆம் கிளை மாநாடு சனிக்கிழமை நடந்தது. மாநிலத் தலைவா் பூமிநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ராஜா சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரங்கராஜன், தஞ்சாவூா் கோட்ட பொதுச் செயலா் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலா் துரைராஜ் ஆகியோா் வாழ்த்தினா். செயற்குழு உறுப்பினா் இந்திராணி வரவேற்றாா்.
கூட்டத்தில் எல்ஐசியில் பங்கு வா்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். முகவா்களைப் பாதிக்கக்கூடிய ஆன்லைன் வா்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். முகவா்களுக்கான குழுக் காப்பீட்டை 25 லட்சமாக உயா்த்த வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். மன்ற முகவா்களுக்கான விதியில் தளா்வுகளை ஏற்படுத்த வேண்டும். பாலிசிதாரா்கள் செலுத்தக்கூடிய பிரீமியத்தில் உள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் முகவா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...