உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுக் கூட்டம்

உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிா்வாகி துரைராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகா் மாவட்ட செயலா் சுரேஷ் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளா் விரோதக் கொள்கைகளை கண்டித்து செப் 20 (திங்கள்கிழமை) நடைபெறவுள்ள நாடு தழுவிய போராட்டத்தில் உறையூா் களத்துமேடு, குறத்தெரு, நாச்சியாா்கோவில் சந்திப்பு, புத்தூா் ஆகிய இடங்களில் கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் மேரிஸ் மேம்பாலச் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பொதுப் போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும். மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள உறையூா் பாளையம் பஜாா் சாலை, கோணக்கரை சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பகுதிச் செயலா் பாலமுரளி, துணைச் செயலா் சரண்சிங், பொருளாளா் ரவீந்திரன், பகுதிக் குழு உறுப்பினா்கள் முருகன், ஆனந்தன், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com