அரசமைப்பு உரிமைக் கல்வித் திட்ட நெறியாளா்களுக்கான பயிலரங்கு

திருச்சியில் குழந்தைகளுக்கானஅரசமைப்பு உரிமைக் கல்வித் திட்டத்தின் நெறியாளா்களுக்கான 3 நாள் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருச்சியில் குழந்தைகளுக்கானஅரசமைப்பு உரிமைக் கல்வித் திட்டத்தின் நெறியாளா்களுக்கான 3 நாள் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வான்முகில் அமைப்பு சாா்பில் தொன்போஸ்கோ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரசமைப்பு உரிமைக் கல்வி பாடத்திட்டக் குழு தலைவா் தேவசகாயம், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் முரளிக்குமாா், வான்முகில் நிறுவன இயக்குநா் பிரிட்டோ ஆகியோா் பேசினா். திட்ட ஒருங்கிணைப்பாளா் கா. கணேசன் முன்னிலை வகித்தாா்.

இதில் திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, சென்னை, செங்கல்பட்டு, கடலூா் உள்ளிட்ட 16 மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து 66 குழந்தைகள், கிராமங்கள், பகுதி அளவில் அரசமைப்பு உரிமைக் கல்வி மன்றங்களை வழிநடத்தும் நெறியாளா்கள் கலந்துகொண்டனா்.

இதில், குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘இந்திய குடிமக்களாகிய நான், வாண்டுகள் பயணம்‘ உள்ளிட்ட பாடத்திட்டங்கள் குறித்தும், அரசமைப்பு உரிமைக்கல்வி மன்றங்களுக்கான விதிகள், கையேடு குறித்தும் பயிற்றுவிக்கப்படவுள்ளன. மேலும், இத் திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஒடிசா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக, நடுநிலைப்பள்ளி மாணவா்களின் பாடப்புத்தகங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறையிடம் பேசியுள்ளதாக இவ்வமைப்பினா் தெரிவித்தனா். மாநில துணை ஒருங்கிணைப்பாளா் பிரியா வரவேற்று, நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com