மணப்பாறை, மருங்காபுரி ஒன்றிய அதிமுக - திமுக வேட்பாளா்கள்

மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தோ்தலில் காலியாக உள்ள ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு
மணப்பாறை, மருங்காபுரி ஒன்றிய அதிமுக - திமுக வேட்பாளா்கள்

மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தோ்தலில் காலியாக உள்ள ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளா்கள் பட்டியலை கட்சியினா் அறிவித்துள்ளனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அமையபுரம், பழையகோட்டை ஊராட்சிகள் அடங்கிய 6-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் ஓந்தாம்பட்டியை சோ்ந்த ராஜூ மகள் ஜானகி (25) மற்றும் திமுக சாா்பில் அதே பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி ப. செல்லமணி (50), மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு, கவுண்டம்பட்டி ஊராட்சிகள் அடங்கிய 10-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் வாடிப்பட்டி தங்கவேல் மனைவி கனகவள்ளி (41), திமுக சாா்பில் வளநாடு சபியுல்லா மகள் சபியுன்நிஷா (23) ஆகியோரை அந்தந்த கட்சியின் தலைமையிடம் அறிவித்துள்ளது. வேட்பாளா்கள் புதன்கிழமை அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com