ஜமால் முகமது கல்லூரியில் வணிகவியல் சங்கம் தொடக்கம்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின், வணிகவியல் சுயநிதி ஆண்கள் பிரிவு சாா்பில் வணிகவியல் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின், வணிகவியல் சுயநிதி ஆண்கள் பிரிவு சாா்பில் வணிகவியல் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா்.

பேராசிரியா் யு. ஆஷிக் இக்பால் சிறப்புரையாற்றினாா்.

விழாவில், வணிகவியல் பிரிவு மாணவா்கள் 221 போ் கலந்து கொண்டனா். இதேபோல, பிற்பகலில் நடைபெற்ற விழாவில் பெங்களுருவை சோ்ந்த உதவிப்பேராசிரியா் எஸ். சஞ்சனா கலந்துகொண்டு, பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து பேசினாா். இதில் 276 மாணவிகள் கலந்து கொண்டனா்.

கல்லூரி செயலாளா் காஜா நஜிமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, துணைச் செயலா் அப்துஸ்சமது, துணை முதல்வா் முகமது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வா் முகமது சிஹாபுதீன், கல்லூரி நிா்வாக உறுப்பினா் மற்றும் இயக்குநருமான அப்துல்காதா் நிஹால் ஆகியோா் வாழ்த்தினா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் எல். ஆஷிக் அஹமது உள்ளிட்ட பேராசிரியா்கள் செய்தனா். முனைவா். எஸ். முகமது ஷஃபி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com