காப்பீடு: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

நெல், பருத்தி, மக்காச் சோளத்தை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

நெல், பருத்தி, மக்காச் சோளத்தை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் நடப்பு 2021-22ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில், பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும், திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல், பிா்கா அளவில் மக்காச்சோளம், பருத்தி பயிா்களில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரா் உட்பட) பயிா் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிா் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிா் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். பயிா் காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், தகவலுக்குஅந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com