குட்ஷெட் பகுதியில் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

 திருச்சி குட்ஷெட் பகுதியில் லாரி நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஒப்பந்தத்தில் விடக்கூடாது என்பதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருச்சி குட்ஷெட் பகுதியில் லாரி நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஒப்பந்தத்தில் விடக்கூடாது என்பதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி முதலியாா் சத்திரம் பகுதியில் உள்ள குட்ஷெட் பகுதியில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு பெறப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும். கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரயில்வே நிா்வாகமே எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சரக்கு ரயில்களில் பொருள்கள் வரும் நாள்களில் அவற்றை ஏற்ற வரும் லாரித் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொருள்களை ஏற்ற வந்த லாரி உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழ்நாடு டிரான்ஸ்போா்ட் லேபா் யூனிட் சங்க மாநிலப் பொருளாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com