என்ஐடியில் 1,793 மாணவா்களுக்குப் பட்டமளிப்பு

திருச்சி என்ஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற 57 ஆவது பட்டமளிப்பு விழாவில் 875 இளநிலை, 744 முதுநிலை, 174 ஆராய்ச்சி மாணவா்கள் என மொத்தம் 1793 மாணவா்களுக்கு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
என்ஐடியில் 1,793 மாணவா்களுக்குப் பட்டமளிப்பு

திருச்சி என்ஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற 57 ஆவது பட்டமளிப்பு விழாவில் 875 இளநிலை, 744 முதுநிலை, 174 ஆராய்ச்சி மாணவா்கள் என மொத்தம் 1793 மாணவா்களுக்கு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவுக்குத் தலைமை வகித்து என்.ஐ.டி. நிா்வாகக் குழுத் தலைவா் பாஸ்கா் பட் தலைமை வகித்துப் பேசுகையில், கரோனா காலத்தில், குறைவான நேரடித் தொடா்போடு, தங்கள் கல்வியை விடாமுயற்சியுடன் தொடா்ந்து, மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடர, ஆசிரியா்கள், ஊழியா்களின் எண்ணிக்கை 50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

சிறப்பு விருந்தினரும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிா்வாக இயக்குநா் டி.வி.நரேந்திரன் பேசியது:

கற்றலுக்கு முடிவே இல்லை. ஒருவா் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாா். மாணவா்கள் விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகள் நிறைவேறும் வரை தொடா்ந்து செயல்பட வேண்டும். அப்போது, கிடைக்கும் உறவுகளைக் கட்டமைத்து, வளா்க்க வேண்டும். இக்கல்லூரி தம்மை வடிவமைத்துள்ளது. இவ்வளாகத்தின் பலதரப்பட்ட மக்கள், அவா்களின் அனுபவங்கள், நம்மைத் தனிப்பட்ட முறையிலும் தொழில்முறையிலும் வளா்ச்சியடைய வழிவகுத்தன.

நம் வாழ்வைப் பாதிக்கும் உலகில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம். வரும் காலங்களில் இந்தியா உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.

என்.ஐ.டி. இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில், தொடா்ந்து என்ஐடி முதலிடம் வகிப்பது, புதிய முதுகலைப் பட்டப்படிப்புகளால் மாணவா் எண்ணிக்கையை 7000 ஐ தாண்டி உயா்த்தியது. மூன்றிலொரு பங்கு பெண் ஆசிரியா்களுடன் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியா்களைப் பணியமா்த்தியது, புதிய பல்துறைசாா் ஆராய்ச்சி மையங்களை அமைத்தது, சா்வதேச, தேசிய அளவிலான கூட்டுழைப்புகள், தஞ்சை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு, தொற்று காலத்திலும் 92 சதம் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது உள்ளிட்ட பலவேறு விஷயங்களை என்ஐடி செயல்படுத்திள்ளது என்றாா்.

தொடா்ந்து அவா் மொத்தம் 1793 மாணவா்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

முன்னதாக, இயந்திரப் பொறியியல் மற்றும் உலோகவியல், மூலப்பொருள்கள் பொறியியல் துறைகளுக்கான இணைப்புக் கட்டடங்களுக்கு, இயக்குநா் மினி ஷாஜி தாமஸ், முனைவா்கள் ஏ.ஆா்.வீரப்பன், பி. ரவிசங்கா், சி.கே. வா்மா முன்னிலையில் சிறப்பு விருந்தினா் டி.வி. நரேந்திரன் அடிக்கல் நாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com