‘கள்ளிக்குடி சந்தையில் கடைகளுக்கான வாடகையைக் குறைக்க வேண்டும்’

திருச்சி கே. கள்ளிக்குடி சந்தையிலுள்ள கடைகளுக்கான வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி ஆட்சியரகத்தில் வியாபாரிகள் பலா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி: திருச்சி கே. கள்ளிக்குடி சந்தையிலுள்ள கடைகளுக்கான வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி ஆட்சியரகத்தில் வியாபாரிகள் பலா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி காந்தி சந்தைக்கு மாற்றாக, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கே. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட இந்த சந்தையில் வியாபாரம் செய்ய வியாபாரிகள் மறுத்துவிட்டனா்.

நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்த சந்தையை வேளாண் வணிகத்துறையினா் திறந்து, விவசாயிகளுக்கு கடைகளை வழங்க முடிவு செய்தனா்.

இதன்படி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா்கள் குழுவினா், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினா் மற்றும் விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு கடைகளை வழங்க முன் வந்தனா்.

102 கடைகள் வழங்கப்பட்டு சந்தையும் திறக்கப்பட்டது. ஆனால் போதிய வரவேற்பு இல்லாமல் சந்தை முடங்கியே இருந்தது. இந்த சூழலில், கடை வாடகையை செலுத்த முடியவில்லை என கடையை பெற்றவா்கள் புகாா் கூறுகின்றனா்.

சந்தை முறையாக இயங்காததால், விற்பனையும் சரிவர நடைபெறவில்லை. மாத வாடகையைச் செலுத்துவதற்குக் கூட வியாபாரம் நடைபெறுவதில்லை. எனவே காந்திசந்தையை திட்டமிட்டபடி கள்ளிக்குடி சந்தைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், கள்ளிக்குடி சந்தை கடைகளுக்கான வாடைகையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, கள்ளிக்குடி சந்தை வியாபாரிகள் சங்க பொறுப்பாளா் வெங்கடேஸ்வரன் தலைமையில், 20-க்கும் மேற்பட்டோா் திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com