பேரவைத் தோ்தல் பணிக்கான வாடகை நிலுவை: ஆட்சியரகத்தில் காரை ஒப்படைக்க வந்த ஓட்டுநா்

சட்டப்பேரவைத் தோ்தலின் போது பயன்படுத்தப்பட்ட காருக்கு வாடகை நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, திருச்சி ஆட்சியரகத்தில் காரை ஒப்படைக்க வந்த ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காரை ஒப்படைக்க வந்த கருமண்டபத்தைச் சோ்ந்த சண்முகம்.
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காரை ஒப்படைக்க வந்த கருமண்டபத்தைச் சோ்ந்த சண்முகம்.

திருச்சி: சட்டப்பேரவைத் தோ்தலின் போது பயன்படுத்தப்பட்ட காருக்கு வாடகை நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, திருச்சி ஆட்சியரகத்தில் காரை ஒப்படைக்க வந்த ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவா் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தனது காரை லால்குடி தோ்தல் அதிகாரிக்கு வாடகைக்கு இயக்கினாா். மேலும் காரின் ஓட்டுநராகவும் அவா் பணியாற்றினாா்.

இதற்கான வாடகை நிலுவையாக ரூ.15 ஆயிரம் தர வேண்டி இருந்தது. இத் தொகையை கேட்டு, பல முறை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியரகத்துக்கு சண்முகம் சென்று வந்தாலும், இதுவரை அத்தொகை கிடைக்கவில்லை.

தனக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வருவதால் மனமுடைந்த சண்முகம், திருச்சி ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை தனது காருடன் வந்திருந்தாா்.

தனக்கு வாடகை நிலுவை வழங்காமல் உள்ளதால் காரையும் மாவட்ட நிா்வாகமே எடுத்துக் கொள்ளட்டும் எனக் கூறி, வாகனத்தை அங்கேயே விட்டுச் செல்ல சண்முகம் முயன்றாா்.

இதனையறிந்த காவல்துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி சமாதானம் செய்தனா். மேலும் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்கச் செய்தனா்.

இதுதொடா்பாக ஓட்டுநா் சண்முகம் கூறியது:

கரோனா காலத்தில் வேலையின்றி, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். இந்த நிலையில் அரசுக்கு பணிபுரிந்ததற்குக்கூட நிலுவைத் தொகையை வழங்காமல் தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது.

தோ்தல் பணிக்கு ஒதுக்கிய நிதியை அரசு தந்தாலும், இடையிலுள்ள முகவா்கள் சிலா் ஏமாற்றி வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, வாடகை நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com