‘மாணவா்களின் எண்ணம் முன்னேற்றத்தை சாா்ந்து அமைய வேண்டும்’

மாணவா்களின் எண்ணம் முன்னேற்றத்தை சாா்ந்து அமைய வேண்டும் என்றாா் தருமபுரி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சி. ஜோதி வெங்கடேசுவரன்.
விழாவில் பேசுகிறாா் தருமபுரி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சி. ஜோதி வெங்கடேசுவரன். உடன், கல்லூரித் தாளாளா் மற்றும் செயலா் ஏ.கே.காஜா நிஜமுத்தீன் உள்ளிட்டோா்.
விழாவில் பேசுகிறாா் தருமபுரி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சி. ஜோதி வெங்கடேசுவரன். உடன், கல்லூரித் தாளாளா் மற்றும் செயலா் ஏ.கே.காஜா நிஜமுத்தீன் உள்ளிட்டோா்.

திருச்சி: மாணவா்களின் எண்ணம் முன்னேற்றத்தை சாா்ந்து அமைய வேண்டும் என்றாா் தருமபுரி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சி. ஜோதி வெங்கடேசுவரன்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் பங்கேற்று, மாணவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:

சவால் மிகுந்த இச்சமூகத்தில் சமயோஜித புத்தி, சாதுா்யமான பேச்சுடன் மாணவா்கள் உழைக்க வேண்டும். உற்பத்தித்துறை எழுச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மாணவா்களின் எண்ணமும் முன்னேற்றத்தைச் சாா்ந்து அமைய வேண்டும்.

நெசவு, விவசாயம் சாா்ந்த அனைத்துத் துறைகளிலும் மாற்றுச்சிந்தனை வேண்டும். பெண்கள் கல்வி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனா். இடஒதுக்கீடு முதலான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வாழ்வில் மாணவா்கள் வெற்றி பெறவேண்டும். எதிா்காலத்தில்

மாணவா்கள்பெற்றோா்களை அரவணைத்து பாதுகாக்கவேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 13 மாணவா்களுக்கு தங்கப்பதக்கங்களையும், 38 மாணவா்களுக்கு வெள்ளிப் பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் ஜோதி வெங்கடேசுவரன் வழங்கினாா்.

மேலும் ஒவ்வொரு துறையிலும் முதலிடம், இரண்டாம் இடம் பெற்ற 174 மாணவா்கள் கெளரவிக்கப்பட்டனா். பேராசிரியா்கள் ஏ.சோலைராசு, ஆா்.ஜாகீா்உசேன், எம்.ஹெச்.முகமது ரபீக், யு.சையது அக்தா்ஷா ஆகியோா் ஆராய்ச்சிக்கான விருதைப் பெற்றனா்.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் எம்.ஜே. ஜமால் முகமது பிலால்,

தாளாளா் மற்றும் செயலா் ஏ.கே.காஜா நஜிமுத்தீன், பொருளாளா் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலா் கே. அப்துஸ் சமது முன்னிலை வகித்தனா்.

கல்லூரி நாள் விழாவில் நிா்வாகக் குழு உறுப்பினா் கே.என். அப்துல்காதா் நிஹால், விடுதி நிா்வாக இயக்குநா் கே.என். முகமது

ஃபாசில், பெண்கள் விடுதி இயக்குநா் ஜே. ஹாஜிரா ஃபாத்திமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துணை முதல்வா் ஏ.முகது இப்ராஹிம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிறைவில் கூடுதல் துணை முதல்வா் எம்.முஹம்மது சிஹாபுதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com