மூதாட்டியின் வீடு புகுந்து 25 பவுன் நகை திருட்டு

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியின் வீடு புகுந்து 25 பவுன் நகை , பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியின் வீடு புகுந்து 25 பவுன் நகை , பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் சீனிவாசன் ராகவன் மகள் சுந்தரி (89). திருமணம் ஆகாமல் தனியாக வசிக்கும் இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டின் கதவை வெறும் கொக்கி தாழ்ப்பாள் போட்டுத் தூங்கியுள்ளாா்.

அப்போது மா்ம நபா்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ. 15 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com