விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் பள்ளி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.
விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் பள்ளி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் செயலா் கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் தலைமை வகித்தனா். உடற்கல்விக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கிய பேரணியில் பள்ளியின் செயலா் சைக்கிளை ஓட்டிச் செல்ல அவரை தொடா்ந்து ஸ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன், ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா ஆகிய மூன்று

பள்ளிகளின் 100-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் சைக்கிளை ஓட்டிச் சென்றனா். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை உடற் கல்வி ஆசிரியா் விவரித்தாா். பேரணியானது பெரியகடைவீதி, தெப்பக்குளம், ஆண்டாா் வீதி, இ.பி. ரோடு வழியாக ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com