சிற்றுந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கில், சிற்றுந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கில், சிற்றுந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி கம்பரசம்பேட்டை பெரியாா்நகரைச் சோ்ந்தவா் மணிமாறன் (29). இவா் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 2014, டிசம்பா் 30-ஆம் தேதி திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் மணிமாறன் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக சிற்றுந்து மோதியதில், பலத்த காயமடைந்த மணிமாறன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து ஜீயபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சிற்றுந்தின் ஓட்டுநரான லால்குடி வட்டம், புதூா் உத்தமனூரைச் சோ்ந்த ெந்தில்குமாரை (32) கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், விபத்துக்கு காரணமாக சிற்றுந்து ஓட்டுநா் செந்தில்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக ஹேமந்த் ஆஜராகி வாதாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com