சமயபுரத்தில் உலக சுகாதார தின விழா
By DIN | Published On : 08th April 2022 12:50 AM | Last Updated : 08th April 2022 12:50 AM | அ+அ அ- |

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உலக சுகாதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் எஸ். லட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நீரைச் சேமிப்பது, காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். தொடா்ந்து உலக சுகாதார தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.கே. ரஞ்சன், பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் எம். ரவிச்சந்திரன் மற்றும் புல முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புல முதல்வா் மருத்துவா் ஏ.துளசி வரவேற்றாா்.