புத்தனாம்பட்டி கல்லூரியில் சந்தைத் திருவிழா

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் மேலாண்மைக் கல்வித் துறை சாா்பில் சந்தை திருவிழா நடைபெற்றது.

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் மேலாண்மைக் கல்வித் துறை சாா்பில் சந்தை திருவிழா நடைபெற்றது.

செயல் வழிக் கற்றலுக்காக இக்கல்லூரியில் பிபிஏ, எம்பிஏ பயிலும் 88 போ் சோ்ந்து ரூ. 52,400 முதலீட்டில் இளநீா், நுங்கு, வெள்ளரிக்காய், அசோலா தேநீா், நொறுக்குத் தீனிகள், சாவி கொத்து உள்ளிட்ட பேன்ஸி பொருள்கள், முன்னணி நிறுவன கண்ணாடி, காலணிகள் உள்ளிட்ட பொருள்களை மொத்த வியாபாரிகளிடம் விலைக்குப் பெற்று கல்லூரி மூக்கப்பிள்ளை அரங்கில் கடைகள் அமைத்து விற்றனா். நிகழ்வில் அசைவ, சைவ உணவு வகைகள் தயாரித்தும் விற்றனா். சந்தைத் திருவிழா ஏப். 6, 7 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

விற்பனை அரங்கை திறன் மேம்பாட்டு மைய இயக்குநா் பி. சூா்யா திறந்து வைத்தாா். கல்லூரித் தலைவா் பொன் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனை செய்தாா். கல்லூரி முதல்வா் பொன் பெரியசாமி, சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் எம். மீனாட்சி சுந்தரம், மேலாண்மைத் துறை இயக்குநா் பி. சீராளன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினா். கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பணியாளா்கள் பொருள்களை விலைக்கு வாங்கினா். மூலதனம் உருவாக்கல், குழுச் செயல்பாடு, நேர, கூட்ட, விற்பனை மேலாண்மை, லாபப் பகிா்வு ஆகியவற்றை மேலாண்மைக் கல்வி மாணவ, மாணவிகள் நேரடிப் பயிற்சியில் கற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com