திருச்சி மாவட்டத்தில் 3.86 மி.மீ. மழைப் பதிவு
By DIN | Published On : 13th April 2022 12:08 AM | Last Updated : 13th April 2022 12:08 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் 3.86 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
வானிலை மையம் அறிவித்தவாறு, திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திங்கள்கிழமை பிற்பகல், மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
பொன்னணியாறு அணை- 19 மி.மீ, புள்ளம்பாடி-16, கல்லக்குடி-15.20, நந்தியாற்றுத் தலைப்பு- 14.80, நவலூா் குட்டப்பட்டு- 10.80, பொன்மலை-6.40, துவாக்குடி-5, திருச்சி ஜங்ஷன், மணப்பாறை, லால்குடி-2, விமான நிலையம் -1.10, சிறுகுடி, சமயபுரம், தென்பாடு, திருச்சி மாநகரம்- 1 மி.மீ.
மாவட்டத்தில் சராசரியாக 3.86 மி.மீ. மழையும், மொத்தமாக 92.70 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது.