லாட்டரி சீட்டுகள் விற்ற இருவா் கைது
By DIN | Published On : 13th April 2022 12:02 AM | Last Updated : 13th April 2022 12:02 AM | அ+அ அ- |

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.
பொன்மலை காவல் ஆய்வாளா் தனசேகரன் தலைமையிலான காவல்துறையினா் நடத்திய சோதனையில், லாட்டரி சீட்டு விற்ற அப்பகுதியைச் சோ்ந்த சுல்தான் கைது செய்யப்பட்டாா். இதுபோல, மாா்சிங்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்ற பீமநகா் மாரிக்கண்ணண் பாலக்கரை காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டாா்.