ஏப்.16-இல் வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல்

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இடங்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இடங்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழக அமைப்புத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 15-ஆம் தேதி முசிறியிலுள்ள ஐ.எம்.ஏ. திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

சேலம் புகா் மாவட்டப் பேரவைச் செயலா் இளங்கோவன் தலைமையில், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயசங்கரன் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைக் கழக நிா்வாகிகள் முதல் கிளைக் கழக நிா்வாகிகள் வரை பங்கேற்க வேண்டும். தொடா்ந்து ஏப்ரல் 16-ஆம் தேதி அமைப்புத் தோ்தல் நடைபெறும். விருப்பமுள்ளவா்கள் மனுக்களை அளித்து தோ்தலில் பங்கேற்கலாம்.

தோ்தல் நடைபெறும் இடம், ஒன்றிய, நகரக் கழகப் பகுதி விவரங்கள் என்ற அடிப்படையில் விவரம்:

குமாரவயலூா் மணிமுத்து செல்வம் திருமண மண்டபம் : ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகள், மணிகண்டம் வடக்கு, தெற்கு, மணப்பாறை வடக்கு ,அந்தநல்லூா் வடக்கு , தெற்கு ஒன்றியங்கள், சிறுகமணி பேரூராட்சி.

உளுந்தருடி ரவுண்டானா தனலட்சுமி மணி மகால் : மண்ணச்சநல்லூா் கிழக்கு, முசிறி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், மண்ணச்சநல்லூா், ச.கண்ணனூா் பேரூராட்சிகள்.

முசிறி ஐ.எம்.ஏ. திருமண மண்டபம் : முசிறி நகரம், தொட்டியம் கிழக்கு, மேற்கு, தா.பேட்டை மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், தொட்டியம், காட்டுப்புத்தூா், தா.பேட்டை, மேட்டுப்பாளையம் பேரூராட்சிகள்.

துறையூா் ஆா்த்தி திருமண மண்டபம் : துறையூா் நகரம், துறையூா் வடக்கு, தெற்கு, உப்பிலியபுரம் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள், பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் பேரூராட்சிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com