குறைகேட்பு நாள் கூட்டத்தில் 249 மனுக்கள்
By DIN | Published On : 18th April 2022 11:33 PM | Last Updated : 18th April 2022 11:33 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 249 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்து, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் அம்பிகாவதி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.