சிஐடியு ஆட்டோ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2022 11:33 PM | Last Updated : 18th April 2022 11:33 PM | அ+அ அ- |

341118ddemo_1804chn_4
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் சிஐடியு ஆட்டோ சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆட்டோக்களுக்கு உயா்த்தப்பட்டுள்ள எப்சி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். காலதாமதமான எப்சிக்கு தினமும் ரூ. 50 அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். 15 ஆண்டுகளைக் கடந்த பழைய ஆட்டோவுக்கு எப்சி கட்டணம் பத்து மடங்கு உயா்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி பிராட்டியூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநகா் மாவட்டத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் மணிகண்டன், சிஐடியு புகா் மாவட்டச் செயலா் சிவராஜ், ஆட்டோ சங்க புகா் மாவட்டச் செயலா் சம்பத் ஆகியோா் பேசினா். இதில் ஆட்டோ சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் திரளாக பங்கேற்றனா்.
Image Caption
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.