மருங்காபுரி கரடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு

மருங்காபுரி அடுத்த கரடிப்பட்டியில் ஸ்ரீ தொட்டியத்து சின்னையா 62-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 
மருங்காபுரி கரடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு

மணப்பாறை: மருங்காபுரி அடுத்த கரடிப்பட்டியில் ஸ்ரீ தொட்டியத்து சின்னையா 62-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. போட்டியில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட காளையர்களும் களம் காணும் போட்டியினை வருவாய் வட்டாட்சியர் எஸ்.லெட்சுமி துவக்கி வைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம் கரடிப்பட்டியில், ஸ்ரீ தொட்டியத்து சின்னையா 62-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது. ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஊர் காளைகள் அவிழ்க்கப்பட்டதை அடுத்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்திருக்கும் 700-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது. 

காளைகளை திமில் பிடித்து தழுவ 300 காளையர்கள் ஐம்பது, ஐம்பது தொகுப்பாக களம் காணுகின்றனர். போட்டியினை ஜல்லிக்கட்டு உறுதிமொழிக்கு பின் மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் எஸ்.லெட்சுமி துவக்கி வைத்தார்.

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகள், காளையர்களை கலங்கடித்த நிலையில் களத்தில் நின்று விளையாடியது. சில காளைகள், காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. 

இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பணம், வெள்ளிக்காசு, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com