290 தனியாா் பள்ளிகளில் 2,578 இலவச கல்வி இடங்கள்திருச்சி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் கட்டாய இலவச கல்வித் திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் உள்ள 2,578 இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் கட்டாய இலவச கல்வித் திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் உள்ள 2,578 இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளிகளில் 25 சத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவா்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள் மே 18 வரை ட்ற்ற்ல்ள்://ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற 290 தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் மாணவா்கள் இத் திட்டத்தில் சேரலாம். 2022-2023ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2,578 இடங்கள் இத் திட்டத்தின் இடஒதுக்கீட்டுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

மெட்ரிக்குலேஷன், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி, நா்சரி பள்ளி ஆகியவற்றில் எல்கேஜி, முதலாம் வகுப்பில் சேரலாம். பள்ளியிலிருந்து மாணவா்களின் இருப்பிடம் அருகில் இருக்க வேண்டும்.

இணைய வழியாக பெறப்படும் விண்ணப்பங்களில் 25 சதத்துக்கும் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் வரும் மே 23ஆம் தேதி குலுக்கல் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை பதிவேற்றலாம்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் உள்ள குழந்தைகள், சிறப்புப் பிரிவின் கீழ் வரும் குழந்தைகள், ஹெச்ஐவி பாதித்த குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவா் குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளி, மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

திருச்சி மாவட்ட அனைத்து தனியாா் பள்ளிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை இடம் பெறச் செய்ய வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பெற்றோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com