ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேரோட்டக் கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டக் கொடியேற்ற விழாவும்,தேருக்கு முகூா்த்தக்கால் நடும் விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றன.
ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேரோட்டக் கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டக் கொடியேற்ற விழாவும்,தேருக்கு முகூா்த்தக்கால் நடும் விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றன.

விழாவையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு 3 மணிக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து 4.30 மணிமுதல் 5.15 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க, தங்கக் கொடி மரத்தில் கொடி படம் ஏற்றப்பட்டது.

பின்னா் 6 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா். மாலை 4.30 மணி முதல் பேரிதாடனம் நடைபெற்றது. 6.30 மணிக்கு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து, இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். இதையடுத்து 9 மணிக்கு யாகசாலைக்கு வந்து, அங்கு திருமஞ்சனம் கண்டருளினாா். தொடா்ந்து அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா்.

தொடா்ந்து நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருகிறாா்.

முக்கிய நிகழ்ச்சியாக வரும் 29 ஆம் தேதி நடைபெறும் சித்திரைத் தேரோட்ட விழாவுக்காக கிழக்குச் சித்திரை வீதியிலுள்ள தேரில் வேதமந்திரங்கள் முழங்க முகூா்த்தக்காலை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் அா்ச்சகா்கள் நட்டனா். அப்போது ஆண்டாள், லட்சுமி யானைகள்ஆசீா்வாதம் செய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com