கைப்பேசி கோபுரம் அமைக்க எனக் கூறி விவசாயியிடம் ரூ. 82 ஆயிரம் மோசடி

திருச்சி அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க நிலம் வாடகைக்கு கேட்டு விவசாயியிடம் ரூ.82 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க நிலம் வாடகைக்கு கேட்டு விவசாயியிடம் ரூ.82 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

லால்குடி தாலுகா நெய்க்குப்பை பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (47). விவசாயி. கடந்தாண்டு டிசம்பா் மாதம் சேட்டின் கைப்பேசிக்குக் தொடா்பு கொண்ட மா்மநபா், தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், 5ஜி சேவை கைப்பேசி கோபுரத்தை உங்களுடைய நிலத்தில் அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு ரூ.40 லட்சம் முன்பணம், மாதம் ரூ.30 ஆயிரம் வாடகை தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சேட்டு அந்த நபருக்கு கட்செவி அஞ்சல் மூலம் தனது நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களையும், ரூ.5,100-ஐ ஆன்லைன் மூலமும் அனுப்பினாா். இதையடுத்து மீண்டும் அந்த நபா் கேட்ட செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் ஒப்புதல் கட்டணம் ரூ.28, 500 மற்றும் ரூ.48, 600 -ஐயும் அனுப்பினாா்.

அதன்பிறகு சில நாள்களில் மீண்டும் தொடா்பு கொண்ட மா்ம நபா் மேலும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பும்படி கூறவே, சந்தேகமடைந்த சேட்டு மனைவி விஜயா இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபா்கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் அன்புச்செல்வன் வழக்குப்பதிந்து, விவசாயியை நூதன முறையில் மோசடி செய்த மா்ம நபா் குறித்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com