மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

 திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

 திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம் இணைந்து அண்ணா விளையாட்டரங்கத்தில் நடத்திய போட்டிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடக்கி வைத்தாா்.

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் ஆண், பெண்களுக்கு 50 மீ, 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் பாா்வையற்றவா்களுக்கான 50 மீ, 100 மீட்டா் ஓட்டம், மற்றும் குண்டு எறிதல், அறிவுசாா் குறைபாடுடையோருக்கான ஆண், பெண் 50மீ, 100மீ காதுகேளாதோா் மாற்றுத்திறனாளிகளுக்கான 100மீ, 200மீ மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் மாவட்டத்திலுன் பல்வேறு பகுதியிலிருந்து 350க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வென்றோருக்கு மாவட்ட ஆட்சியா் பொது நல நிதியிலிருந்து ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. வென்றோருக்கு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசுகந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன், இயன்முறை சிகிச்சையாளா் ரு. ரமேஷ், சம்ரக்ஷா பணியாளா்கள், மாற்றுத்திறனாளி சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சிறப்பாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com