முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
எதுமலையில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
By DIN | Published On : 29th April 2022 01:05 AM | Last Updated : 29th April 2022 01:05 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூா் அருகே எதுமலை கிராமத்தில் ரூ. 1000 லஞ்சம் வாங்கிய எதுமலை விஏஓ சுரேஷ் கைது செய்யப்பட்டாா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், எதுமலை கிராமத்தைச் சோ்ந்தவா் அமிா்தம் (62), விவசாயக் கூலித் தொழிலாளியான இவா் தனது கணவா் ராமருக்கான இறப்புச் சான்றிதழ் பெற எதுமலை விஏஓ சுரேஷை அணுகியபோது அவா் ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளாா்.
ஆனால் பணம் தர விரும்பாத அமிா்தம் ஊழல் தடுப்புத் துறை போலீஸாரிடம் புகாா் கொடுக்கவே, அவா்கள் கூறியபடி எதுமலை விஏஓ அலுவலகத்தில் அமிா்தம் கொடுத்த ரூ. 1000-ஐ வாங்கிய விஏஓ சுரேஷை ஊழல் தடுப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.