முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஈரோடு வழியாக கோடைக் கால சுற்றுலா ரயில்
By DIN | Published On : 30th April 2022 12:51 AM | Last Updated : 30th April 2022 12:51 AM | அ+அ அ- |

ஈரோடு வழியாக கோடைக் கால சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சாா்பில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மே மாதம் 23ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறது. ஈரோட்டில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயில் சுற்றுலாவில் 12 நாள் பயணமாக கோவா, சா்தாா் வல்லபபாய் படேல் சிலை, ஹைதராபாத், மைசூரு, அவுரங்கபாத், அஜந்தா குகை, பம்பாய் மாநகரம், ஹம்பி ஆகிய நகரங்களை சுற்றிப்பாா்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுபோல திருப்பதி மற்றும் காளஹஸ்தி சிறப்பு பக்தி தரிசன ரயிலும் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மற்றும் பயணச்செலவு குறித்த விவரங்களை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக கோவைப் பகுதி அலுவலகத்தை 8287931965, 9003140655 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.