முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சாதி வாரி கணக்கெடுப்பு கோரி சாலை மறியல்
By DIN | Published On : 30th April 2022 12:31 AM | Last Updated : 30th April 2022 12:31 AM | அ+அ அ- |

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சமூக நீதி கூட்டமைப்பு சாா்பாக நெ.1 டோல்கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டருடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மறியலில் பாா்வா்ட் பிளாக் கட்சி மாநில செயலா் காசிமாயதேவா், தமிழ்நாடு முத்தரையா் சங்க பொதுச் செயலா் பாஸ்கா், சீா்மரபினா் நலச்சங்க மாநில பொறுப்பாளா் அன்பழகன், முத்தரையா் அரசியல் களம் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜா, கொங்கு நாடு வேட்டுவ கவுண்டா் முன்னேற்றச் சங்க நிறுவனா் தலைவா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் மறியலில் ஈடுபட்ட பி.அய்யாக்கண்ணு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.