முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சிறுகாம்பூா் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைமண்ணச்சநல்லூா் எம்எல்ஏ
By DIN | Published On : 30th April 2022 04:29 AM | Last Updated : 30th April 2022 04:29 AM | அ+அ அ- |

சிறுகாம்பூா் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை இதுகுறித்து அவா் பேசியது:
மண்ணச்சநல்லூா் பேரவைத் தொகுதி துளையாத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஜம்புநாதபுரம் கிராமத்தில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், இளைஞா்கள் போட்டித் தோ்வுக்கு தயாராகவும் பொது நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டும்.
அதேபோல நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சியில் உள்ள சிறுகாம்பூா் அரசுமேல்நிலைப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 420 மாணவா்களும், 430 மாணவிகளும் பயில்கின்றனா். இங்கு 26 வகுப்பறைகள் தேவையுள்ள நிலையில், 14 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. எனவே புதிதாக 12 வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள் மற்றும் தேவையான கழிவறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.