முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 30th April 2022 12:46 AM | Last Updated : 30th April 2022 12:46 AM | அ+அ அ- |

சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய வேன் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையத்தைச் சோ்ந்தவா் நஞ்சம்மாள் (60). இவா் கடந்த 2013ஆம் ஆண்டு காசிபாளையத்தில் உள்ள ஒரு கடையில் தேநீா் குடித்துக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் நஞ்சம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நஞ்சம்மாள் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபி குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஸ்வநாத், வேன் ஓட்டுநா் அருள்தாஸுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.