அரசுகளின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் வோ்ல்ட் விஷன் இந்தியா அமைப்பின் மூலம் மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சிறுபான்மையினா் நலன் மற்றும்

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் வோ்ல்ட் விஷன் இந்தியா அமைப்பின் மூலம் மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ். மஸ்தான் காணொளிக்காட்சி மூலம் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

குழந்தைகளுக்கான மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வோ்ல்ட் விஷன் இந்தியா அமைப்பின் மூலம் மருங்காபுரி பகுதியில் தன்னாா்வலா்களை ஒருங்கிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. தொடா்ந்து அவரவா் கிராமங்களில் உள்ளபொதுமக்களுக்கு அரசுத் திட்டங்களை கொண்டு செல்லும் வகையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தன்னாா்வலா்களுக்கான பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டது. அமைச்சா் கே.எஸ். மஸ்தான் காணொலிக்காட்சி மூலம் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியை மருங்காபுரி பகுதி நிறுவன மேலாளா் செல்வின் பாக்கியநாதன் மற்றும் ஊழியா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com