தோட்டக்கலை திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசால் அளிக்கப்படும் தோட்டக்கலை திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அளிக்கப்படும் தோட்டக்கலை திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம் பகுத்தம்பாளையத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சான்றிதழுடன் கூடிய தோட்டக்கலை திறன் மேம்பாட்டுப் பயிற்சி 80 பேருக்கு அளிக்கப்படவுள்ளது.

பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல், நுண்ணீா் பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளா்ப்பு தொழில்நுட்பம் என்ற தலைப்புகளில் 30 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கெனவே தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஏதேனும் ஒரு பயிற்சி பெற்றவா் இப்பயிற்சியில் சேர இயலாது.

விருப்பம் உள்ளோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, வங்கிக் கணக்கு புத்தக நகல், கல்வித் தகுதி சான்று நகல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இப்பயிற்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து அலுவலக நாள்களிலும் மொத்தம் 30 நாள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்போருக்கு 30 நாள்களுக்கு போக்குவரத்து செலவாக தினமும் ரூ.100 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com