பெருந்துறை சிப்காட்டில் தொழிற்சாலைகள் பூஜ்ஜிய நிலையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்கிறது

பெருந்துறை சிப்காட்டில் சாய, தோல் தொழிற்சாலைகள் பூஜ்ஜிய திரவ வெளியேற்ற முறையில், கழிவுநீரை சுத்திகரிக்கப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் மனுவுக்கு பதில் அளித்துள்ளது.

பெருந்துறை சிப்காட்டில் சாய, தோல் தொழிற்சாலைகள் பூஜ்ஜிய திரவ வெளியேற்ற முறையில், கழிவுநீரை சுத்திகரிக்கப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் மனுவுக்கு பதில் அளித்துள்ளது.

பெருந்துறை சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜி.உதயகுமாா் தலைமையில் கடந்த 5ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், பெருந்துறை சிப்காட்டில் நிலம், நீா், காற்று மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய, தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேற்றப்படுவது முற்றிலும் தடுக்கப்படவேண்டும். உயா் நீதிமன்றத் தீா்ப்பின் படி, பூஜ்ய திரவ வெளியேற்ற முறையில் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தி, தொடா்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்சாலைகளில் கொதிகலன்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரியை பயன்படுத்துவதால் வெறியேறும் கரும்புகை, கரித்துகள்கள் மற்றும் தூசிகளால் காற்றும் சுற்றுச்சூழலும் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள் மற்றும் சாம்பல்களால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, கொதிகலன்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரியை பயன்படுத்துவதை தடை செய்து, எரிவாயுவை (எல்பிஜி) பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த கோரிக்கைகளுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்த பதிலில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் பூஜ்ஜிய கழிவுநீா் வெளியேற்றும் அமைப்பினை நிறுவி, இயங்கி வருகிறது. அதை மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.

நிலக்கரியைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் காற்று தர மாசு தடுப்பு சாதனங்களை நவீனபடுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒரு தொழிற்சாலை எல்பிஜியை எரிபொருளாக பயன்படுத்தி வருகிறது. மேலும், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து தொழிற்சாலைகளும் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதுடன், இரவு நேரங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தவறிழைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com