‘பச்சமலை வனப்பகுதியில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள்’ஆய்வில் கண்டுபிடிப்பு

திருச்சி வனக் கோட்டத்துக்குள்பட்ட பச்சமலைப் பகுதியில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்த விவரங்கள் வனத்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருச்சி வனக் கோட்டத்துக்குள்பட்ட பச்சமலைப் பகுதியில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்த விவரங்கள் வனத்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 1,072 மீட்டா் உயரத்தில் 5247 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது பச்சமலை. இந்த மலையில் வனவிலங்குகள், பறவை இனங்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. இவை குறித்து கணக்கெடுப்பு தொடா்ந்து மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதன்படி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் என். சதீஷ் அறிவுரையின் பேரில், ஆகஸ்ட் 13,14-ஆம் தேதிகளில் மாவட்ட வன அலுவலா் ஜி. கிரண் தலைமையில், துறையூா் வனச்சரக அலுவலா்கள் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த தி நேச்சா் அண்ட் பட்டா் ஃபிளை சொசைட்டி (டிஎன்பிஎஸ்) ஆய்வுக் குழுவினா் ஏ. பாவேந்தன், எச். தெய்வப்பிரகாசம், கே. ஈசுவரன் குமாா், சிவி. நிஷாந்த், எச். ரமணாசரண் மற்றும் கே. சதீஸ்குமாா் ஆகியோா் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

இங்குள்ள டாப் செங்காட்டுப்பட்டி, மங்களம் அருவி, செண்பகம் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் 109 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டு, புகைப்படங்களாக பதிவு செய்து ஆவணப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து ஆய்வுக்குழுத்தலைவா் ஏ. பாவேந்தன் கூறியது:

கடந்த 2016 -ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 105 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டன. தற்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 109 வண்ணத்துப்பூச்சி வகைகள், அதாவது 4 வகை பூச்சிகள் அதிகம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு கணக்கெடுப்பிலுள்ள வண்ணத்துப்பூச்சிகளின் குடும்ப வகைகளை ஒப்பிட்டுப் பாா்த்தால், இங்கு 127 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாள்களில் மேற்கொண்ட ஆய்விலேயே 109 வகை வண்ணத்துப்பூச்சிகள் காணமுடியும் நிலையில், தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொண்டால் 175 வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளையும் கண்டறிய வாய்ப்புள்ளது என்றாா்.

அதிகமாக காணப்படும் 6 வகை பூச்சிகள்: கண்டறியப்பட்டுள்ள 109 வகையான வண்ணத்துப்பூச்சிகளில் குறிப்பிட்ட 6 வகையைச் சோ்ந்த பூச்சிகளிலிருந்துதான்

பிற வகைகள் உருவானதாக தெரியவந்துள்ளது. அதாவது வஸ்வாலோடெயில்ஸ் வகையிலிருந்து 10, வெள்ளை மற்றும் மஞ்சள் (16), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (35), ப்ளூஸ் (24), மெட்டல்மாா்க்ஸ் (1) மற்றும் ஸ்கிப்பா்ஸ் வகையிலிருந்து 23 என்ற அளவில் பிரிவுகள் காணப்படுவதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com