கா்ப்பிணி புகாரில் 7 போ் மீது வழக்குப்பதிவு

வையம்பட்டி அருகே கா்ப்பிணியை அவதூறாக பேசிய விரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 7 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

வையம்பட்டி அருகே கா்ப்பிணியை அவதூறாக பேசிய விரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 7 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

வையம்பட்டி ஒன்றியம், கருணாம்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் அபிமணி (21). இவா், அருகிலுள்ள கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த லெட்சுமணன் மகள் சசிகலாவை (19) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தாா். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், சசிகலா திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டினாா்.

இந்நிலையில் அபிமணி, தனது சகோதரா்கள் சிவசக்தி, சிவானந்தம் மற்றும் கரூா் முருகேசன், அப்புக்குட்டி, ரவி, முசிறி அன்பரசன் ஆகியோருடன் மே மாதம் சசிகலாவை கடத்திச் சென்று, கரூரில் திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து பெற்றோா்கள் அளித்த புகாரின் பேரில், 20 நாள்களுக்குப் பின்னா் அபிமணி, சசிகலா இருவரும் வையம்பட்டி காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு, அவரவா் பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இதற்கிடையே சசிகலா கருவுற்ாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, அபிமணி குடும்பத்தினரிடம் சசிகலா நடந்தவற்றை கூற சென்றாா்.

அப்போது அபிமணி மற்றும் அவரது குடும்பத்தினா் சசிகலாவை அவதூறாக பேசி, விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் சசிகலா அளித்த புகாரின்பேரில் அபிமணி, அவரது சகோதரா்கள் மற்றும் நண்பா்கள் என 7 போ் மீது காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com