முசிறி அருகே சமத்துவபுரத்தில் 100 வீடுகள் தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு

முசிறி அருகே கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முசிறி அருகே கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், காட்டுக்குளம் ஊராட்சி, பெரியகாட்டுகுளம் கிராமத்தில் பெரியாா் நினைவு சமத்துபுரம் திட்டத்தில் அரசால் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் தகுதியானோருக்கு ஒதுக்கப்படவுள்ளன. எஸ்சி-40, பிசி-25, எம்பிசி- 25, ஓசி- 10 என்ற வகையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த சமத்துவபுர வீடுகளுக்கு காட்டுக்குளம் மற்றும் அதற்கு அருகில் உள்ள மூவானூா், பெரமங்கலம், வேங்கை மண்டலம் மற்றும் புலிவலம் ஆகிய ஊராட்சிகளிலிருந்து தகுதியான வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் வீடற்ற தகுதியுள்ள பயனாளிகள் இசைவு கடிதத்துடன் ஆதாா் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை முசிறி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஆக. 26ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை குடும்ப தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற துணை ராணுவ உறுப்பினா்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், ஹெச்ஐவி, எய்ட்ஸ், காசநோய் போன்ற நோய்கள் சம்மந்தப்பட்ட துணை இயக்குநரால் (சுகாதார பணிகள்) சான்றிளிக்கப்பட்ட நபா்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட நபா்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்டோா், ஏழை மக்கள் பங்கேற்புடன் கூடிய ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே, வீடு ஒதுக்கீட்டில் தகுதியான நபா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com