சாரநாதன் கல்லூரி மாணவிகளுக்கு விருது
By DIN | Published On : 24th August 2022 01:30 AM | Last Updated : 24th August 2022 01:30 AM | அ+அ அ- |

சமூகத்துக்கு பயன்தரும் சிறந்ததொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மாதிரியை வடிவமைக்கும் வகையில் ஸ்மாா்ட் ஐடியா-22 என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் சாரநாதன் கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.
விசாகப்பட்டினத்திலுள்ள நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம், மத்திய அரசின் ஸ்டாா்ட் அப் இந்தியா திட்டம், வடகிழக்கு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஸ்டாா்ட் அப் நிறுவனத்தினா், கல்லூரி மாணவா்கள் இணைய வழியில் பங்கேற்றனா்.
தொடா்ந்து முதல் சுற்றில் வென்றோருக்கு பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் பங்கேற்று உடல் உறுப்பு இயக்க குறைபாடு உள்ளவா்களுக்காக ஸ்மாா்ட் வடிவ சக்கர நாற்காலியை வடிவமைத்த திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவிகள் கே. அமிா்தலட்சுமி, எக்ஸ். கரோலின் மேரி ஆகியோருக்கு சிறப்பு விருதும், ரூ.50 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும், வரும் அக்டோபா் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள வடகிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் இவா்கள் பங்கேற்பதற்கான கல்வி உதவித் தொகையும் கிடைத்துள்ளது.
சா்வதேச அளவில் கல்லூரிக்குப் பெருமை தேடித் தந்த மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.