ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை
By DIN | Published On : 09th December 2022 12:05 AM | Last Updated : 09th December 2022 12:05 AM | அ+அ அ- |

img_20221208_wa0098_0812chn_15_4
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை வியாழக்கிழமை இரவு கொளுத்தப்பட்டது.
விழாவையொட்டி வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்துக்கு வந்தாா். பின்னா் 11 மணி முதல் பிறபகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி, மாலை அலங்காரம் அமுது செய்து புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
தொடா்ந்து 6 மணிக்கு உத்தமநம்பி ஸ்வாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் 2-ஆம் புறப்படாக இரவு 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு காா்த்திகை கோபுர வாசலருகே அமைக்கப்பட்ட காா்த்திகை சொக்கப்பனையைச் சுற்றிவந்து சக்கரத்தாழ்வாா் சன்னதி வாயிலில் கதிா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து சொக்கப்பனை தீபம் கொளுத்தப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
பின்னா் தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி சந்தனு மண்டபம் சோ்ந்தாா் நம்பெருமாள். அங்கு ஸ்ரீமுகப்பட்டயம் படித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 10.15-க்கு திருக்கைத்தலச் சேவையுடன் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.