திருச்சி மக்களவைத் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்மாவட்ட பொதுக்குழுவில் தீா்மானம்

வரும் தோ்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் காதா் மொக
திருச்சி சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் காதா் மொக

வரும் தோ்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் மரக்கடை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் எம்.ஏ.எம். நிஜாம் தலைவமை வகித்தாா். துணைச் செயலாளா் ஹாபிழ். அல்லாபக்ஷ் இறைவணக்கம் பாடினாா். துணைத் தலைவா் முப்தி உமா் பாரூக் வரவேற்றாா். மாநில கொள்கை பரப்புச் செயலாளா் காயல் மகபூப் சாஹிப், மாநில ஊடக அணி துணை ஒருங்கிணைப்பாளா் கோம்பை ஜெ.நிஜாமுதீன், மாவட்ட பொருளாளா் ஹூமாயூன், வடக்கு மாவட்டத் தலைவா் அப்துல் வஹாப், தெற்கு மாவட்ட செயலாளா் ஹபீபுா் ரஹ்மான், சுதந்திர கிசான் சங்க தேசிய பொருளாளா் பாரூக் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் பேசியது: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் 75-ஆம் ஆண்டு பவள விழா மாா்ச் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

2024 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடரும். மக்களவைத் தோ்தல் வியூகங்கள் மற்றும் போட்டியிடும் இடங்கள் தொடா்பாக சென்னையில் நடைபெறும் மாநாட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

மேலும், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் திருச்சி தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, மாநில தலைமை பெற்றுத் தர வேண்டும். இதுகுறித்து, திமுக கூட்டணி தலைமையிடம் வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டத் துணைத் தலைவா் பாரூக், துணைச் செயலாளா் ஜமால், இளைஞா் அணி மாவட்ட செயலாளா் சையது ஹக்கீம், மாணவரணி மாநில பொதுச் செயலாளா் அன்சா் அலி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் பைரோஸ் மற்றும் மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com