முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
119 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள்
By DIN | Published On : 07th February 2022 12:34 AM | Last Updated : 07th February 2022 12:34 AM | அ+அ அ- |

திருச்சியில் மொத்தம் 119 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன.
ஊரகப் பகுதிகளில் திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட 65 இடங்களிலும், மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், பூங்காக்கள் உள்பட 54 இடங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.