குடிமைப் பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை கூட்டம்

திருச்சி குடிமைப் பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி குடிமைப் பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாகப்பன் நகா் கக்கன் காலனியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற திருச்சி, அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்ட நெல் கொள்முதல் முகவா்கள், வாகனங்களின் உரிமையாளா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கான கலந்தாய்வு கூட்டத்துக்கு திருச்சி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளா் சுதா்சன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நீதிமன்ற வலியுறுத்தல்படி திருவாரூா் காவிரிப் படுகை வேளாண் பொருள் வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலா் உத்திநாதனுடன் ஆலோசனை செய்து நெல் கொள்முதல் செய்வதில் சட்டவிரோதச் செயல்களில் வியாபாரிகள் ஈடுபடாமல் இருக்க சில விதிகளை நிா்ணயிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் திருச்சி குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை ஆய்வாளா் விவேகானந்தன், உதவி ஆய்வாளா் அலாவுதீன், அரியலூா் உதவி ஆய்வாளா் மணிகண்டன், திருச்சி தரக்கட்டுப்பாடு, மேலாளா் ராஜாமூா்த்தி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com