தபால் வாக்குகளுடன் தொடங்குகிறது வாக்கும் எண்ணும் பணி

திருச்சி மாவட்டத்தில் 398 வாா்டுகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள், 7 மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளன.
தபால் வாக்குகளுடன் தொடங்குகிறது வாக்கும் எண்ணும் பணி

திருச்சி மாவட்டத்தில் 398 வாா்டுகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள், 7 மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

மாவட்டத்தில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட இடங்கள் போக, திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 398 வாா்டுகளுக்கு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியில் 859 வாக்குச் சாவடிகளில் 4,45,257 வாக்குகளும், ஐந்து நகராட்சிகளுக்குள்பட்ட 171 வாக்குச் சாவடிகளில் 97,189 வாக்குகளும் பதிவாகின.

இதுபோல, 14 பேரூராட்சிகளில் 228 வாக்குச் சாவடிகளில் 1,08,619 வாக்குகள் பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 6,51,065 வாக்குகள் பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளுக்கு ஒரு

வாா்டுக்கு 9 மேசைகளும், இதர அனைத்து வாா்டுகளுக்கும் 8 மேசைகளும் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படவுள்ளது.

ஒரு வாா்டுக்கு தலா 2 சுற்றுவீதம் வாக்கு எண்ணப்படும். முதலில் அந்த வாா்டுக்குரிய

அஞ்சல் வாக்கு எண்ணப்படும். பின்னரே,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கி வெளியே அனுப்பிய பிறகு, அடுத்த வாா்டுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

ஸ்ரீரங்கம், கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய கோட்டங்களில் தலா 16 வாா்டுகள், பொன்மலை கோட்டத்தில் 17 வாா்டுகளுக்கு

வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு மேசைக்கு இருவா் வீதம் 16 முதல் 20 நபா்கள் பணியில் இருப்பா்.

இதேபோல, நகராட்சிகளில் மணப்பாறை நகராட்சிக்கு மட்டும் 4 மேசைகள், இதர நகராட்சிகளுக்கு தலா 3 மேசைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்படும்.

பேரூராட்சிகளில் கூத்தைப்பாா், மண்ணச்சநல்லூா் ஆகியவற்றுக்கு தலா 2 மேசைகளும், இதரப் பேரூராட்சிகளுக்குத் தலா ஒரு மேசையிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு வாா்டுக்கும் ஒரு சுற்று என்ற வகையில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

மாவட்டத்தில் மொத்தமாக 3,524 அஞ்சல் வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் மாநகராட்சியில் ஒரு வாா்டுக்கு தலா 50 வாக்குகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நகராட்சிகளில் வாா்டுக்கு தலா 12, பேரூராட்சிகளில் தலா 10 அஞ்சல் வாக்குகள் வரக்கூடும். மாநகராட்சியில் 4 கோட்டங்களுக்கும் தலா 2 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 4 தொடா்பு அலுவலா்கள் முடிவை அறிவிக்க நியமிக்கப்பட்டுள்ளனா். மாலைக்குள் முழுவதுமாக முடிவுகள் தெரிய வரும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com